சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் – சுமந்திரன் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று எம்.ஏ.சுமந்திரனால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் “மக்கள் ஆணையற்ற அரச தலைவரே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம்.
அத்தோடு தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதேவேளை அரச தலைவர் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கிறது. எனவே நடாத்த வேண்டிய தேர்தல்களை கூட நடாத்தாமல் இருக்கிற இந்த அரச தலைவர் இனியும் தாதமிக்காது அரச தலைவர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டுமென்றார்.
அரச தலைவர் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கு பேசப்பட்டு வருவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது தமிழரசுக் கட்சி இதைப்பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை எனவும் தேர்தல் அறிவிக்கப்படுகிற போது இது சம்மந்தமாக கலந்துரையாடி முடிவெடுப்போம் என பதிலளித்துள்ளார்.
மேலும் பொது வேட்பாளரோ தனி வேட்பாளரோ அது எவருக்கும் இருக்கிற உரிமை. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். உவரையும் போட்டியிடக் கூடாது என்று சொல்லுகிற உரிமை எவருக்கும் கிடையாது.
இந்த பொது வேட்பாளர் தொடர்பில் எமது தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார் யார் வேட்பாளர்கள் என தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.
இதேவேளை அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ள விடயம் குறித்து கேட்ட போது அவர் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியினரும் எல்லா மக்களின் வாக்கும் தங்களுக்கு தான் என்று சொல்லுவார்கள். ஆகையினால் அதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. ஆபையினால் யாருக்கு வாக்களிப்பது என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews