
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான ‘அரசறிவியலாளன்’ ’06 வது இதழ் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில்
கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர் சு.டிலக்சன் தலமையில் இடம் பெறவுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராசா அவர்களும், சிறப்பு விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக அரசறியியல் துரை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசறிவியல் துறை விரிவுரையாளர்களான ந.தர்மினி, கு.யஸ்மிகா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
