தம்மை அசௌகரியப்படுத்தும் 3 விடயங்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறுகோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட கிளை வடமாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைத்தியர்களின் ED கொடுப்பனவை வேண்டுமென்றே தாமதப்படுத்தியமை தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேல் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இவ்வாறான நிலையில் மேல் அதிகாரிகளிடத்திலிருந்து
சாதகமான பதில் கிடைத்திருக்கும் நிலையில் யாழ்.பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் கணக்காளரின் செயற்பாடுகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறுகோரி வடமாகாண பிரதம செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பிய நிலையில் மூன்று நிபந்தனைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவ் விடையங்களான மருத்துவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை விரைவாகச் செலுத்த ஏற்பாடு செய்தல். யாழ்ப்பாண RDHS கணக்காளருக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணைக்கு ஏற்பாடு செய்து மே மற்றும் ஜூன் மாதங்களின்
ED நிலுவைத் தொகையின்போது ஏற்பட்ட தாமதங்களைச் சரிசெய்தல். எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தின் RDHS இன் நிதித்துறையின் பயனுள்ள செயல்பாட்டை உறுதிசெய்தல். மற்றும் தொற்றுநோய் சூழ்நிலையை சமாளிக்க RDHS க்கு ஆர்வமுள்ள
மற்றும் திறமையான கணக்காளரை நியமிக்க தேவையான ஏற்பாடுகளைச் முன்னெடுத்தல். ஆகிய விடயங்களை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டு உள்ள நிலையில் அதன் பிரதி வடக்கு மாகாண ஆளுநருக்கும்,
மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.