
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பி சென்ற பொழுது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தியால் பலதடவைகள் பலமாக குத்தப்பட்டு கொலை சம்பவம் ஒன்று நேற்று(4) அரங்கேறியது.
30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் (வயது 30) என்ற குடும்பஸ்தரே கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தருமபுர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.