வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச மகளிர் தின விழா 05.04.2024 வெள்ளிக்கிழமை இன்று பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 ஆரம்பமான நிகழ்வின் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபம் நோக்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு பிரதமர விருந்தினராக சட்டத்தரணி திருமதி கோசலை மதனும்
சிறப்பு விருந்தினர்களாக மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி சிவபாதம் சுதோகுமார், மருதங்கேணி பிரதான பொலிஸ் பரிசோதகர் u.m.j.w.k அமரசிங்க,கெளரவ விருந்தினராக யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தயாபரி கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
விழிப்புணர்வு ஆற்றுகை,கெளரவிப்பு,சுய தொழில் ஊக்குவிப்பு கடன் வழங்கல்,மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கின் பல பிரதேசங்களில் இருந்து அதிகளவான பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.