கிளிநொச்சியில் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06-10-2021) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
சர்வதேச ஆசிரியர் நாளான இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்ககூட்டணி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன
அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது இப்போராட்டத்தின் போது உலக ஆசிரியர் தினத்தில் அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை நீக்கு….
பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்….
இலவசக் கல்வியை வியாபாரம் செய்யாதே……
கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய் ….போன்ற கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தினை சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.