உக்ரைனின் தரையில் , ரஷ்யப் படைகள் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகப் பின்னுக்குத் தள்ளுவது “கடினமானது” என்று உக்ரைனின் ஆயுதப் படைகளின் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பக்முட் பகுதியின் நிலைமை குறிப்பாக சவாலானது என்று சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யர்களின் வசம் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மற்றொரு நகரமான அவ்டிவ்காவுக்கு அருகில், பெர்வோமைஸ்கி மற்றும் வோடியானியில் கடுமையான போர்கள் நிகழ்வதாககவும் கூறியுள்ளார்.
முன்வரிசையின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.