இரத்மலானையில் உள்ள அரச சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர் மது அருந்திய நிலையில் பொது மலசல கூடத்தில் வாந்தி எடுத்தமை தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வெளியில் பல தகவல்கள் மறைக்கப்பட்ட நிலையில் முறைப்பாட்டாளர் வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் கேள்விகளை வழங்கியிருந்தார்.
குறித்த கேள்வியில் சம்பந்தப்பட்ட வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி தொடுக்கப்பட்ட நிலையில் பிரதம செயலாளர் செயலகம் பின் வருமாறு தகவலை வெளியிட்டுள்ளது.
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண கல்வி பணிப்பாளர் வட மாகாண பிரதமர் செயலாளர் அலுவலகத்திற்கு குறித்த விடயம் தொடர்பான அறிக்கை இதுவரை வழங்கவில்லை .
இரத்மலானை அரச விடுதியில் வட மாகாண கல்வி பணிப்பாளர்கள் சிலர் மற்றும் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளப்பட்ட விரும்பத்தகாத செயல் தொடர்பில் விடுதி பொறுப்பாளரினால் முறையிடப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்துக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட மூலத்திற்கு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.
குறித்த முறைப்பாட்டில் மது அருந்தியவர்கள் தங்கியிருந்த ஏனைய உத்தியோகத்தர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தியமை தொடர்பிலும் விடுதி பொறுப்பாளர்களால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை அரச சுற்றுவிடுதியில் முறைகேடாக நடந்து கொண்ட அதிகாரிகள் தொடர்பில் தொடர்புடைய அதிகாரிகளை உடன் இனம் கண்டு நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவர்கள் தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எமது NP/02/02/Cir App/2023ம் இலக்க 2023.01.10 கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கடித இலக்கம் NP/03/02/GA/1/Inquiryம் இலக்க 2023 திகதிய கடிதம் மூலம் இணைப்பு -02 மூலம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அறியத் தரமாறு கூறப்பட்ட நிலையிலும் உரிய நடவடிக்கைய எடுக்கப்படவில்லை என தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு கோரிக்கைகளுக்கும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை இடும் வரை இரத்மலாணை அரச விடுதியில் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என NP/02/02/Cir. App/2023 23.01 .10 திகதிய கடிதம் மூலம் வட மாகாண பிரதம செயலாளர் நிர்வாகத்தினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டமூலத்திற்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டியவர்கள் முரணாக நடந்து கொண்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் உரிய முறையில் அறிக்கை இடும் வரை வட மாகாணத்தில் உள்ள அனைத்து வலய கல்விப் பணிப்பாளர்களும் சுற்றுலா விடுதியில் தாங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறான நிலையில் முறைப்பாட்டாளருக்கு 2024.04 .02 பதில் வழங்கிய பிரதம செயலாளர் செயலகம் வடமாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் பிரதமர் செயலாளர் செயலகத்திற்கு அறிக்கை தராததால் சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாற்றமடைந்து போதிலும் வடமாகாண கல்வி பணிப்பாளராக ஜோன் குயின்ரஸ் தொடர்ந்தும் அதே பதவியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.