
நாளை நாட்டில் அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது நாளை (08) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களுடன் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை இவ்வாறு அதிகரித்து காணப்படக்கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே போதுமான அளவு நீர் அருந்துவது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.