ஓய்வுபெற்ற படைவீரர்கள் தொடர்பில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டம்..!

ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பங்குபற்றும் நிகழ்வொன்று வன்னி பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூர்வதுடன், அவர்கள் தேசத்திற்காக ஆற்றிய சேவைகளையும் பாராட்டுகின்றேன்.

நாட்டிற்காகவும், தேசத்திற்காகவும் பல தியாகம் செய்தவர்களின் நலனை நாம் உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள், ரணவிரு சேவா அதிகாரசபை என்பன இணைந்து ஏனைய பொது நிர்வாக முகவர்களுடன் சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் இதர சேவைகளின் உதவிகளை கோரும் போது போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் திட்டத்தின் கீழ் போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது  என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews