மைத்திரியின் நியமனம் சட்டவிரோதமானது!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டதாக  கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் நிகழ்ச்சியொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் உள்ளிட்ட கட்சியின் சில உறுப்பினர்களினால் தவறுதலாக மைத்திரி தலைமை பதவியில் அமர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கட்சி யாப்பு பற்றிய போதிய தெளிவின்மையால் இந்த தவறு இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வெளிநபர்கள் சவால் விடுத்ததன் பின்னர் கட்சியின் யாப்பு குறித்து தெளிவு ஏற்பட்டது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பினை ஜனநாயகமானதாக திருத்தி அமைக்கும் நோக்கில் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews