நாடளாவிய ரீதியில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு..!

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பொலிசாரால் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் திரிவேத இராணுவத்தின் பாதுகாப்பு படையினர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன் கீழ், நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 இஸ்லாமிய பள்ளிவாசல்களில்,

2,453 இஸ்லாமிய பள்ளிவாசல்கல் மத வழிபாடுகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது

மேலும் இந்த பாதுகாப்பிற்காக 5,580 போலீஸ் அதிகாரிகள், 510 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 1,260 ராணுவ வீரர்கள் உட்பட 7,350-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews