அத்தியாவசிய உணவுப்பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம்: இறப்புக்கள் அதிகரிக்கலாம்

இலங்கையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட அன்றாடம் உண்ணும் பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனப் பொருட்களைச் சேர்ப்பதால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட்டர் கேக் உட்பட சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான கேக்கில் பட்டர் தவிர முட்டைகள் எதுவும் இல்லை என பொது சுகாதார பரிசோதகர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்பாக பொறுப்புள்ள தரப்பினரிடையே உடனடி மற்றும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், இன்னும் 5-6 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தொற்றா நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews