யாழ்ப்பாணம் – கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
“சிவனருள்” நிறுவனத்தின் நிதி அனுசரணையில் “ஐயம் இட்டு உண்” அமைப்பின் ஏற்ப்பாட்டில் அதிபர் சி.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், சிவனருள் இல்லப் பொறுப்பாளர் செ. செல்வரஞ்சன், ஐயம் இட்டு உண் அமைப்பின் தலைவர் செ.முரளீதரன், பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க பாடசாலையின் அதிபர் திருமதி லுசிந்தா தர்மினி பாலேந்திரன், வெண்கரம் அமைப்பின் இயக்குநர் மு.கோமகன், யோ.ரதீஸ், ஆசிரியர்கள் ,மாணவர்கள், பாடசாலைச் சமூகப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இதன்போது ஐயம் இட்டு உண் அமைப்பின் சேவையைப் பாராட்டி தலைவர் முரளீதரன் பாடசாலை சமுகம் சார்பாக வலையக் கல்விப்பணிப்பாளரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கட்டார்.
தற்போதைய அதிபர் ஆசிரியர்களின் அற்பணிப்பான சேவையின் முயற்சியால் பாடசாலை மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.