உள்ளுர் சந்தைகளில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்த மக்கள் அணி திரள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கடந்த காலத்தில் எண்ணெய், எரிவாயு, மின்சாரம் இல்லாத போது மக்கள் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நின்றார்கள்.
ஆனால் உள்ளுர் சந்தைகளில் இடம்பெறுகின்ற அநீதிக்கு எதிராக இதுவரை அத்தகைய நடவடிக்கையை மக்கள் எடுக்கவில்லை.
எனவே, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக மக்கள் எழுந்து நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
முகப்புத்தகத்தில் காட்சிப்படுதலுடன், நாட்டு மக்கள் அனைவரும் அறியும் வகையில் விலை அறிவிப்பு முறையை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தொரிவித்துள்ளார்.