முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமையால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன நாட்டையும் சாப்பிட்டார். ஆட்களை சாப்பிட்டுவிட்டு இப்போது தாய்லாந்திற்கு சென்று விட்டாரோ என அஞ்சுகிறோம்.

இது ஒரு தப்பிக்கும் முயற்சியா? என தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவரை உடனடியாக வரவழைத்து சட்டத்தை அமல்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews