யாழில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை…!

யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப்  குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ்அப்  குழு உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த பாடசாலையின் அதிபரையும்,  வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி பாடசாலையில் நிதி சேகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக நேற்றையதினம்(10) சில தரப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், நிதி சேகரிப்பு குறித்து விசாரணை நடாத்துவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews