அரசாங்கத்தினால் 10 கிலோகிராம் வீதம் 30 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அரிசியை புத்தாண்டுக்கு முன்னதாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனை இம் மாதம் 21ஆம் திகதி மற்றும் மே மாதத்தில் வழங்குவதற்கு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்தாகவும், எவ்வாறாயினும், புத்தாண்டுக்கு முன்னர் விநியோகிக்கக் கூடிய அனைத்து பிரதேசங்களிலும் அரிசி விநியோகிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.