![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1712898014-al.jpg)
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடரும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், 342,883 பரீட்சார்த்திகளின் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.