நேற்றையதினம், வெண்கரம் படிப்பக மாணவர்களால் உலக தாய்மொழி தினம் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது.
வெண்கரம் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற “எங்கள் இனத்தின் அடையாளம் தமிழ்” எனும்தொனிப் பொருளில் அமைந்த தாய்மொழி தின நிகழ்விற்கு வெண்கரம் படிப்பக மாணவி அபிநயா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஆசானுமாகிய திருமதி நி.சுமித்ரா அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
கலை நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் திரு மு.கோமகன் வழங்கி மாணவர்களது தமிழாற்றலை பாராட்டியதுடன் மாணவர்கள் தமிழ் பண்பாட்டு உடையில் கலந்து கொண்ட பெருமைக்குரிய செயற்பாட்டை வாழ்த்தினார்.
தாய்மொழிதினத்தை பிறந்த தினமாக கொண்ட எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஷ் அவர்களது அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு
அவர்களுடைய தாயார் திருமதி செல்லையா பவளவள்ளி அவர்கள் பரிசாக மாணவர்களுக்கு பயனுள்ள புத்தகங்களை வழங்கிவைத்
தார்.
நிகழ்வுகளின் இறுதியாக “தமிழ்மொழி எங்கள் இனத்தின் அடையாளம். நாம் தமிழர். தமிழால் கையொப்பமிட்டு தாய்மொழியின் பெருமையை அடையாளப்படுத்துவோம்” என்ற மாணவர்களது பிரகடனம் விழாவை அர்த்தப்படுத்தியது. தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்விற்கு அராலி மற்றும் சுழிபுரம் வெண்கரம் படிப்பக மாணவர்கள் பெற்றோர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.