இன்று நாட்டின் சுகாதாரத் துறை மோசமாகி வருகிறது. நாடு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. நாடு பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், தரமற்ற மருந்துகளின் இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருந்ததில்லை. இன்று மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் மருந்துகளின் விலைகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய அரசாங்கம் மக்களின் சுகாதார தேவைகளைக்கூட பூர்த்தி செய்வதில் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது. இன்று இரத்தப் பரிசோதனைகளின் விலை மிக அதிகம்.
இலங்கை வங்குரோத்து அடைந்துவிடக் கூடாது என்று அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கோடீஸ்வரப் பெண் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு வங்கிகள் இலங்கையில் கடன் கடிதங்களை ஏற்க மறுக்கின்றன. ஆறு மாதங்களுக்குப் பிறகு இலங்கை வங்கிகள் எத்தகைய நிலையான நிதி இருப்புகள் இருக்காது என்று பயந்து ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்த மாட்டோம் என்று கூறுகின்றன. இன்று அத்தகைய கடன் கடிதங்களை வழங்க ஒரு வெளிநாட்டு வங்கி சான்றளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கொரோனாதான் காரணம் என்று அரசாங்கம் கூறலாம். இது முழுப் பொய். கொரோனா தொற்றுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தெற்காசிய நாடுகள் இன்று இலங்கையின் நாணயத்தை எடுத்துச் செல்லும் அளவு ஸ்திரத்தன்மையில் உள்ளன.