
நேறறு முன்தினம் மறைந்த வயலின் வித்துவான் ஜெயராமன் அவர்களது நினைவு பேருரை இன்று சந்நிதியான் ஆச்சிரமத்தில் அதன் முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது.

இன்று காலை 11:00 மணியளவில் ஆரம்பமான நினைவு பேருரையில் நினைவுரைகளை ஓய்வு பெற்ற அதிபர் சிவநாதன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் செஞ்சொற் செல்வர் ச.லலீசன், இளங்கலைஞர் மன்றத்தின் பிரதிநிதி செல்வச்சந்திரன் ஆகியோர் ஆற்றினர்.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், ஆடியவர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
