
சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருள் தொகையுடன் 02 மீன்பிடி படகுகள் இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக இரண்டு படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு தற்போது காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக தெரிவித்த கடற்படை பேச்சாளர், துறைமுகத்திற்கு கொண்டு வந்த பின்னர் குறித்த இரண்டு படகுகளும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.