புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 14 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் 14 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள், 500 காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் 400 இராணுவத்தினர் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.