
ராஜஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் காரில் பயணித்த ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சுரு-சலாசர் நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஒரே திசையில் வந்த காரின் பின்னால் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் காரில் பயணித்தவர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.