
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் (கஜன்) சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
உடல்நலமின்மை காரணமாக இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு, இரண்டு தடவைகள் தவிசாளர் பதவியை வகித்தமை குறிப்பிடத்தக்கது.