அவுஸ்திரேலியா 2022ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் வரவேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் நேற்றுத் தெரிவித்தார்.அவுஸ்திரேலிய மக்கள் தொகையில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 வீதத்தினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எல்லை தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று மொரிசன் கூறினார். தற்போது அவுஸ்திரேலியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்ட குடிமக்களும் நிரந்தரவாசிகளும் அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளுக்குச் சென்று வர, அவுஸ்திரேலியா அண்மையில் அனுமதி கொடுத்தது. வெளிநாட்டு மாணவர்களின் வருகை இல்லாமல் அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் சிட்னியில் ஆரம்பமான வேகமாகப் பரவக்கூடிய டெல்டா கொரோனா திரிபு இன்னும் அந்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.