
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் (16/04/2024) பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட
முத்துஐயன்கட்டு, ஜீவநகர் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக மலசலகூடம் கட்டுமானப் பணிக்காக 1ம் கட்ட நிதியாக 75,000 ரூபா வழங்கப்பட்டதுடன்
வவுனியா – கணேசபுரம் கிராமசேவகர் பிரிவிலுள்ள அறநெறிப் பாடசாலையின்
கட்டிடம் அமைப்பதற்கான 2ம் கட்ட நிதியாக 150,000 ரூபாவும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இவை உதவிகளை சந்நிதியான் ஆச்சிரிம சுவாமிகள் கலாநிதி மோகனதாஸ் அவரது ஆச்சிரம தொண்டர்களுடன் நேரில் சென்று வழங்கிவைத்தார்.