வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.