![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1711877250-heat-2-1.jpg)
ஏப்ரல் மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளிலும் வெப்பநிலை தரசுட்டெண் அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டின் 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ,தெற்கு மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினைவிட அதிகரித்து காணப்படும்.
அத்தோடு, மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்ககூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும், மன்னார் மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.