கொவிதுபுர – ஜெயந்தி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று காலை பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் கொட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவர் நேற்று முன்தினம் (19) வீட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொவிதுபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.