பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி நாளை (22) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக ஆதரவளிக்கும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ள போதிலும்,
அந்த சம்பளத்தை வழங்குவதற்கு தோட்ட கம்பனிகள் முன்வராதமையைக் கண்டித்தே இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்வுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.