சிங்கராஜ வனப்பகுதியில் 3 நாட்கள் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வன பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
காடுகளை அழித்தல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இது தெரியவந்துள்ளது.
வனப் பாதுகாப்புத் தளபதியின் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.