தமிழ் மக்கள் கூட்டணியின் எற்பாட்டில், நூலாசிரியர் செல்வேந்திரா சபாரட்ணம் எழுதிய “இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும்” என்னும் நூல்வெளியீடு நேற்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் க.வி.விக்கினேஸ்வரனின் தலைமையில் அவரது வாஸ்த்துதலத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் திணைக்கள பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் கலந்துகொண்டு இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பு தமிழ் மக்களின் இன சுத்திகரி ப்பும் என்னும் நூலுக்கு ஆய்வுயுரையினை நிகழ்த்தினர்.
இதனை தொடர்ந்து நூலாசிரியர் உரையினை செல்வேந்திரா சபாரட்ணம் நிகழ்த்தினர்.
இவ் நூலின் முதல் பிரதியினை நூலாசிரியர் செல்வேந்திரா சபாரட்ணம் வெளியீட தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் க.வி.விக்கினேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து ஏனைய பிரதிநிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது
இங்கு தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலர் த.சிற்பரன், க.இராஜதுரை, மத்தியசெயற்பட்டு குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.