கடந்த மாதம் தமிழ் மக்களின் சுய மரியாதையைப் பாதிக்கும் இரண்டு விடயங்கள்
நடந்தேறியிருக்கின்றன. ஒன்று சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைச்
சாலைகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை
அனுராதபுரம் தமிழ்ச் சிறைக் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்தும் தலையில்
துப்பாக்கியை வைத்தும் அச்சுறுத்திய விடயமாகும். இரண்டாவது திலீபன் நினைவுத்
தூபியில் அஞ்சலி செலுத்தச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன் பொலீசாரினால் பலாத்காரமாக கைதுசெய்யப்பட்டதோடு அவரால்
ஏற்றப்பட்ட தீபத்தை பொலீசார் காலால் தட்டி அணைத்த விவகாரமாகும். இவ்
இரண்டிலும் அவமானப்படுத்தப்பட்டது அரசியல் கைதிகளோரூபவ் செல்வராஜா
கஜேந்திரனோ அல்ல. மாறாக தமிழ்த் தேசமே!
துரதிஸ்ட வசமாக ஒருங்கிணைவு
அரசியல் இல்லாததினால் இவ் ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு பேரெழுச்சியாக
வளர்ச்சி பெறவில்லை. சோடாப் போத்தலில் அடைக்கப்பட்ட காஸ் போல கொஞ்சம்
மேலெழும்பி முழுமையாக அடங்கிவிட்டது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 12ம் திகதி தனது பெண் நண்பியுடனும்
வேறு நண்பர்களுடனும் மது போதையில் மாலை 6 மணி போல சென்ற இராஜாங்க
அமைச்சர் லொகான் ரத்வத்தை தமிழ் அரசியல் கைதிகளை அவர்களின் சிறை
அறைகளிலிருந்து வெளியே வரச்செய்து முழங்காலில் நிற்க வைத்தார். பின்னர்
அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார் தனது பாதணிகளை
நாவினால் நக்கி சுத்தப்படுத்துமாறு வற்புறுத்தினார்.
தமிழ் அரசியல் கைதிகள் தமிழ்த் தேச விடுதலை என்கின்ற பொது
விவகாரத்திற்காகவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் எனவே அமைச்சர்
லொகான் ரத்வத்தை அரசியல் கைதிகளை அவமானப்படுத்தியதன் மூலம் தமிழ்த் தேசத்தையே
அவமானப்படுத்தியிருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்ட இந்த
நிலைமை இது தான் முதல் தடவை அல்ல. 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் 27 ஆம்
திகதிகளில் 53 தமிழ் அரசியல் கைதிகள் குத்தியும் வெட்டியும் கோரமாகப்
படுகொலை செய்யப்பட்டனர். மயில்வாகனம் என்ற 15 வயதுச் சிறுவன்
சிறைக்காவலரினாலேயே தலைமுடியில் இழுத்துவரப்பட்டு ரூபவ் வெட்டப்பட்டு
கொல்லப்பட்டான். 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பதுளை
பிந்தனுவ புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல்
கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையை மேற்கொள்வதற்காக அன்றைய
தினம் இராணுவத்தினரும் ரூபவ் பொலீசாரும் முகாம் காவலிருந்து
அகற்றப்பட்டனர்.இது தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கூட
நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு யூலை மாதம் 04
ஆம் திகதி வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான
நிமலரூயஅp;பனும் டில்ருக்~னும் படுகொலை செய்யப்பட்டனர். இதே போன்று 1997
ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி களுத்துறைச்சிறைச்சாலையில் தமிழ்
அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். 2011 ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 65 தமிழ் அரசியல்
கைதிகள் சிறைக்காவலர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டடிருந்தனர்.
இதே போல கடந்த 23ம் திகதி நல்லூரில் உள்ள திலீபன் நினைவுத் தூபி
முன்னால் அஞ்சலி செலுத்தச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்த
முற்பட்டபோதும் பலவந்தமாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர்
ஏற்றிய தீபத்தையும் பொலீசார் காலால் தட்டி அணைத்தனர். அதனைத் தடுக்கச் சென்ற
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மகளீர் அணியின் பெண்களையும் அவர்களது
தொலைபேசியைப் பறித்து அச்சுறுத்தினர்.
இங்கு இறந்தவர்களை நினைவு கூர்வதென்பது ஜ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு
சட்ட ரீதியான உரிமையாகும் அதேவேளை தமிழ் மக்களின் கலாச்சார உரிமையும் கூட.
இந்த நினைவுகூரல்களை அவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று மேற்கொள்ளும்
உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இங்கு பொலிசாரால் கவனித்திருக்க வேண்டியது
அவர்கள் சுகாதார முறைப்படி நடந்துகொள்கின்றார்களா? இல்லையா? என்பதைத்தான்.
இங்கு பொலீசார் தமது அதிகார வரம்பெல்லையை மீறியுள்ளனா.
இரண்டாவது செல்வராஜா கஜேந்திரன் ஒரு சாதாரண நபர் அல்ல. அவர்
மக்களின் பிரதிநிதி அவரைப் பலவந்தப்படுத்தி கைதுசெய்து இழுத்துச் செல்வது தமிழ்
மக்களையும் தமிழ் தேசத்தையும் அவமதிக்கும் செயலாகும.; ஒரு பாராளுமன்ற
உறுப்பினருக்கே இப்படியென்றால் சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும்
என்பது இங்கு கூறத் தேவையில்லை.
மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென சில சிறப்புரிமைகள்
உண்டு. மக்கள் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும். என்பதற்காகவே இந்த
சிறப்புரிமைகள் வழங்கப்படுகின்றன. அந்த சிறப்புரிமைகளில் ஒன்று
பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதாயின் சபாநாயகரின் அனுமதி பெறப்பட
வேண்டும் என்பதாகும். இங்கு சபாநாயகரின் எந்த அனுமதிமில்லாமல் கஜேந்திரன்
கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நான்காவது தீபமேற்றுவது என்பது தமிழ் மக்களின் பண்பாட்டு மரபுகளில்
வளர்ந்த ஒன்றாகும். தீபம் ஏற்றப்பட்ட பின் அந்தத் தீபம் மக்களினால்
கடவுளாகவே மதிக்கப்படுகின்றது. அந்தத் தீபத்தை பொலீசார் சப்பாத்துக் காலால்
தட்டி அணைத்த நிகழ்வானது ஒரு கலாச்சார அழிப்பாகும். இன அழிப்பு என்பதே
நிலத்தைப் பறித்தல்ரூபவ் மொழியைப் புறக்கணித்தலரூபவ்; பொருளாதாரத்தை சீரழித்தல்ரூபவ்
கலாச்சாரத்தை அழித்தல் என்பனதான். இவ்வாறு பார்த்தால் தீபத்தை சப்பாத்துக்
காலால் தட்டிய நிகழ்வானது அப்பட்டமான இன அழிப்ப என்றே கூற வேண்டும்.
ஐந்தாவது கைதைத் தடுக்கச் சென்ற பெண்கள் அச்சுறுத்தப்பட்டதோடு அவர்களின் கைத்
தொலைபேசியும் பறிக்கப்பட்டன. இது அப்பட்டமான அடிப்படை மீறலோடு பெண்
உரிமை மீறலுமாகும்.
இங்கு பொலிசார் ஐந்து பெரிய குற்றங்களைப் புரிந்திருக்கின்றனர்.
நண்பர் சுகாசின் வார்த்தைகளில் கூறுவதானால் இது முழுக்கமுழுக்க பொலிஸ்
பயங்கரவாதம். சிறீலங்காவின் அரச இயந்திரம் அனைத்தும் இனவாத
மயப்பட்டிருப்பதையே இந்த நிகழ்வு காட்டியது.
இந்த இரண்டு விவகாரங்களும் அடிப்படையில் அரசியல் பிரச்சினைகள் தான்.
தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிப்பது என்ற சிங்கள தேசத்தினது இலக்கின்
தொடர்ச்சிதான். எனவே இந்த விவகாரத்தை ஒருங்கிணைந்த அரசியல் மூலமே அணுக
வேண்டும்.
இக் கட்டுரையாளர் தொடர்ச்சியாக வற்புறுத்துகின்ற விடயம் இன்று தமிழ்
மக்கள் பெரும் தேசியவாதத்திற்கு முகம் கொடுத்தல்ரூபவ் சர்வதேச அரசியலைக் கையாளல்
என்கின்ற இரண்டு பெரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்த இரண்டு
நெருக்கடிகளையும் தனித்தனியாக கையாள முடியாது. அவ்வாறு கையாள முற்பட்ட சிறிய
வெற்றிகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது. ஒருங்கிணைந்த அரசியல் மூலம்
கையாளும் போதுதான் வினைத்திறனுள்ள அடைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதுவும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை உலகளாவியதாக இருக்க வேண்டும். யாழ்
பல்கலைக்கழக நினைவுத் தூபி தகர்க்கப்பட்டமைக்கான போராட்டமும்ரூபவ் பொத்துவில் முதல்
பொலிகண்டிவரை போராட்டமும் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இருந்தமையினால்
வினைத்திறனுள்ள அடைவுகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
துரதிஸ்டவசமாக இந்த இரண்டு சுயமரியாதை மீறல் நடவடிக்கைகளிலும் ஒருங்கணைந்த
அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட
விவகாரம் உலகத்தின் கவனிப்பைப் பெற்றது. வழமைக்கு மாறாக சிங்கள தேசத்தின்
அரசியல்ரூபவ் சமூக இயக்கங்களிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்தன. ஐ.நா
வதிவிடப் பிரதிநிதி கண்டித்தார். சர்வதேச மன்னிப்புச் சபையும் கண்டித்தது. ஆனால்
தமிழ் அரசியல் தலைமைகள் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து முன்னேறவில்லை.
அனுராதபுரம் விவகாரம் தொடர்பாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள்
கடந்த மாதம் 15ம் திகதி ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தி பல
கோரிக்கைகளை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முன்வைத்தன. அரசியல் கைதிகள்
அவமானப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்கும் வரை
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளைப்
பகிஸ்கரித்தல்ரூபவ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுதல்ரூபவ்
நீதிமன்றத்தில் சிறைச் சாலைகளில் நடந்தவற்றை வெளிப்படுத்த ஒழுங்குகளைச்
செய்தல்ரூபவ் தமிழ்க் கட்சிகளது பிரதிநிதிகள் குழு ஒன்றை உருவாக்கி
சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைகளை கண்காணித்தல் என்பனவே
அக் கோரிக்கைகளாகும்.
தமிழ் அரசியல் தலைமைகள் இக் கோரிக்கைகள் பற்றி அறவே கவனம்
செலுத்துதவில்லை. கூட்டாக அல்லாமல் தனித்தனியாகவே விவகாரங்களைக் கையாண்டன.
பத்திரிகைகளில் அறிக்கைப் போரை மட்டும் நடாத்தினர். எல்லா விவகாரங்களையும்
சட்டப் பிரச்சினையாக்கும் சுமந்திரன் அடிப்படை உரிமை ம|Pறல் வழக்கை
தொடர்வதற்கு ஏற்பாடு செய்தார். அந்த நடவடிக்கையைக் கூட ஒரு கூட்டு நடவடிக்கையாக
மேற்கொள்ள அவர் முன்வரவில்லை.
சிறீலங்கா பாராளுமன்றத்திற்குச் செல்வதனால் தமிழ் மக்களுக்குப்
பெரிய பயன் கிடைக்கப் போவதில்லை. கிடைக்கும் பயன் ஒன்றுதான். அதாவது அதனை
மேடையாகப் பயன்படுத்துவதனால் கிட்டும் பயன்தான். அது மேடையாகப்
பயன்படுத்துவததென்பது வீராவேசத்துடன் பேசுவது மட்டுமல்ல பாராளுமன்றத்தைப்
போராட்ட களமாக மாற்றுவதும் இதில் அடங்கும். தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்த
அரசியலைப் பின்பற்றியிருந்தால் வலுவான போராட்ட களமாக பாராளுமன்றத்தை
மாற்றியிருக்கலாம்.
அரசியல் கைதிகளின் விவகாரத்தில் அவர்களின் உறவுகள் கேட்டது
போல பாராளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரித்து எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம்.
அல்லது பாராளுமன்றத்திலேயே எதிர்ப்பலை ஒன்றை உருவாக்கியிருக்கலாம்.
சிங்கள தேசக் கட்சிகள் பலவும் அதற்கு ஆதரவினைத் தெரிவித்திருக்கும்.
பாராளுமன்றத்திற்கு வெளியே கூட்டுக் கண்டன அறிக்கை ஒன்றை விடுத்திருக்கலாம்ரூபவ்
தமிழர் தாயத்திலுள்ள உள்ளுராட்சிச் சபைகளில் கண்டனத் தீர்மானங்களை
நிறைவேற்றியிருக்கலாம்.
கஜேந்திரன் கைது விவகாரத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபை ஏகமனதாக
கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால்
ஏகமனதான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதற்காக மேஜர் மணிவண்ணனைப்
பாராட்ட வேண்டும். முல்லைத்தீவு பிரதேச சபையிலும் பெரும்பான்மை ஆதரவுடன்
தீர்மானம் நிறைறே;றப்பட்டிருக்கின்றது. ஏனைய உள்ளுராட்;சிச் சபைகளிலும்
கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கலாம்.
தாயகத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுப் பெற்றிருந்தால் புலம் பெயர்
நாடுகளிலும்ரூபவ் தமிழகத்திலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் உருவாகியிருக்கும். ஜெனிவா
கூட்டத் தொடர் நடைபெறுகின்ற காலமாக இருப்பதனால் இது வலுவாக உலகின் கவனத்தையும்
பெற்றிருக்கும். ஜெனிவாவிலும் போராட்டத்தை புலம்பெயர் மக்கள்
நடத்தியிருப்பர்.
இக் கட்டுரையாளர் அடிக்கடி கூறுகின்ற விடயம் உலகளாவிய அரசியல்
போராட்டம் மூலமே. அரசின் ஒடுக்குமுறைகளை கட்டுப்படுத்தலாம் என்பதாகும்.
ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் உலகளாவிய அரசியல் போராட்டத்தை நடாத்த
முடியாது.
தமிழ் மக்களுக்கு இப்போதைய தேவை ஒருங்கிணைந்த அரசியலே! இதற்கான வலுவான
உரையாடல்களை உடனடியாக ஆரம்பிப்பது அவசியம்.