ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்திரபாலவும் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தற்காலிக தலைமைச் செயலாளர் எடுத்த முடிவுகளை அமல்படுத்த தடை விதித்து நீதிமன்றம் மற்றொரு தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
இந்த தடை உத்தரவு வரும் மே 8 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.சந்துன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.