
மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியை வந்தடைந்தது.
கிளிநொச்சி அக்கராயன் ஆரோக்கியமாதா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு அருட்தந்தை அல்பட் சேகர் தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், மாவட்டத்தின் பல பிரதேசங்களிற்கும் திருச்சொருப பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மடுமாதா முடிசூடப்பட்டு 100வது ஆண்டு நிறைவையொட்டி குறித்த திருச்சொருப தரிசனம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
அத்துடன் 1999ம் ஆண்டு 75ம் ஆண்டு பூர்த்திக்காக இவ்வாறு பயணம் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.