இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடருந்துகளின் மிதிபலகைகளில் பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஃபுட் போர்டில் ஏறி செல்ஃபி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், இதனால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில், ஒஹியா தொடருந்து நிலையத்திற்கு அருகில் பொடி மெனிகே எக்ஸ்பிரஸில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் கீழே விழுந்தார்,
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்த அபாயகரமான பயணத்தை சுற்றுலா பயணிகள் மேற்கொள்வதை தொடருந்து காவலர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது