
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண்கள் மூவர் உடன் அமுலாகும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய என்.டி.செனவிரத்ன, ஏ.ஆர். ஜயசுந்தர, டபிள்யூ.ஜே.பத்மினி ஆகியோர் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் மூவர் ஒரே தடவையில், பிரதி பொலிஸ் அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.