இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 173,000 ஆக குறைந்துள்ளது.
நேற்று (24) இதன் விலை 174,800 ரூபாவாக காணப்பட்டது
இதற்கிடையில் 190,000 ரூபாயாக நிலவிய “24 கரட்” தங்கம், ஒரு பவுனின் விலை இன்று 188,000 ரூபாயாக சற்று குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.