
பருத்தித்துறை நகர சபையினரால் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை 9:22 மணியளவில் சுப வேளையில் இடம் பெற்றது.
சமய கிரியைகளை தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை வருமான வரி பிரிவு கிளைத் தலைவர் தி.சிவநேசன் மரக்கறி சந்தைக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

ரூபா 51 மில்லியன் பெறுமதியான குறித்த மரக்கறி சந்தை கட்டிடம் பருத்தித்துறை நகர சபையின் சொந்த நிதியில் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை நகர சபையின் நிர்வாக பொறுப்பு அதிகாரி, நிரஞ்சனி உமாகாந்தன்
பிரதம பொது முகாமைதுவ அதிகாரி கமலினி உதய சேகரன்
உள்ளூராட்சி உதவியாளர் தாரணி மதியழகன்
கணக்கு பதிவு அதிகாரி செபஸ்தியாம்பிள்ளை ராஸ்குமார் உட்பட பருத்தித்துறை நகரசபை அதிகாரிகள் நலன் விரும்பிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
