
தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலேதான், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமை வளர்த்துவிட்டவர் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுரேஸ் சாலே தற்போது தனக்கும் இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது.
நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார்.
சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன். அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும்.
சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.