
தந்தை செல்வாவின் 47 ஆவது ஆண்டு நினைவேந்தலானது செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் தூபியில் நேற்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ,முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தந்தை செல்வாவின் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.
இதன் பொழுது செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையினர் , தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், முன்னாள் பேராயர் ஜெபநேசன் , இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் அரசாங்க அதிபர் வேதநாயகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
