கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலை என்ற பெயரில் நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய அதிபர், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலை என்ற பெயரில் கிடைக்கப்பெற்றிருந்தும் அரசினர் முஸ்லீம் #கலவன் (அ.மு.க) பாடசாலை என்ற பதவி முத்திரையைப் பயன்படுத்திக் கையொப்பம் வைத்துள்ளமை யாரைத் திருப்திப்படுத்துவதற்காக என கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த பாடசாலையின் பெயர் ஆரம்பத்தில் தமிழ்க் கலவன் பாடசாலை என்றே காணப்பட்டது. பின்னர் அது முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளே ஏற்படுத்தி இருந்தது.
பரீட்சை அனுமதி அட்டையிலும் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டு கையொப்பம் இடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.