
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
விசாரணை தொடர்பில், நாளைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இரத்தினபுரி பகுதியில் ஆற்றிய உரையொன்றில் கூறிய விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
நாளைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு சம்பிக்க ரணவக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.