
கிளிநொச்சியில் மின்தகன மையானம் அமைப்பது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் கொரோனா காரணமாக மரணமடையும் உடலங்களை எரியூட்டுவதற்கு வேறு அமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதன் காரணமாக நீண்ட நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் கரைச்சி பிரதேச சபைக்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கிளிநொச்சியின் பிரபல வர்த்தகர் ஒருவர் ஒரு தொகையை அன்பளிப்பாக உதவ முன்வந்துள்ள நிலையில் புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்தநிலையில் மையானம் அமைப்பதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டது.
குறித்த பணிக்காக 2 .5 கோடி நிதி தேவையுள்ள நிலையில் கிளிநொச்சியில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளிடம் இருந்து அன்பான கோரிக்கை கிளிநொச்சி மாவட்ட மக்களின் இடர் அறிந்து உதவுமாறும் குறித்த மின்தகன அமைப்பு குழுவினரால் இலங்கை வங்கியில் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி இலக்கத்திற்கு பணம் வைப்பிலிடுவதன் மூலம் குறித்த பணியை மிக வேகமாக முடிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை வங்கியின் கணக்கு இலக்கம் 87856951 கிளிநொச்சி