தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளையதினம்(01) கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார நடவடிக்கைகளுமின்றி மூடுவதாகவும் இத் தொழிலாளர்களுக்காக சுதந்திரத்தை வழங்குவதற்காகவும் அத்தினத்தில் எதுவித வியாபார நடவடிக்கைகளும் நடைபெறமாட்டாது என்பதனையும் வர்த்தகர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் அறிவிப்பதாக கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2024.05.01 திகதி இந்நாளில் உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை காலமாக எமது பொதுச் சந்தையின் ஊழியர்களுக்கான விடுமுறை வழங்கப்படாமை மிகவும் கவலையளிப்பதாக எமது பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எமது வர்த்தக சங்கத்திடம் பல முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக எமது கல்முனை மாநகர பொதுந் சந்தை வர்த்தக சங்கம் ஊழியர்களின் மேலான கோரிக்கையை கவனத்தில் கொண்டு முதலாளித்துவமாகிய வர்த்தகர்களின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற ஊழியர்களின் வேண்டுகோளை நிறை வேற்று முகமாக, எமது கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார நடவடிக்கைகளுமின்றி மூடுவதாகவும், இத் தொழிலாளர்களுக்காக சுதந்திரத்தை வழங்குவதற்காகவும் அத்தினத்தில் எதுவித வியாபார நடவடிக்கைகளும் நடைபெறமாட்டாது என்பதனையும் வர்த்தகர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் அறியத் தருகின்றோம்.
ஆகவே பொதுச் சந்தையிலுள்ள சகல கடை உரிமையாளர்களும் தங்களது கடைகளை மூடி இத்தொழிலாளர்களுக்கான இத் தினத்தில் இந்த கட்டாய ஓய்வினை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் பணிவுடன் வேண்டிக் கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.