
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட முரியாக்குளம் எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று இருக்கலாமென சந்தேகிப்பதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த யானைக் குட்டியை குழித்தோண்டி புதைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.