
கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. அனைத்திற்கும் முன் பிள்ளைகள் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார்


மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள் கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்த டி. சில்வா இன்றைய தினம் பகல் 11 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட இவர் பெண்கள் சிறுவர்களுக்கான உதவித் திட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளார்.