தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் இன்று மேதினத்தில் ஒன்று கூடியிருக்கிறோம்.
காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டும், மதம் அழிக்கப்படும் நிலையிலும்,
மொழிக்கான உரிமை மறுக்கப்பட்டு
அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்.
நிலம், மொழி உள்ளிட்ட விடயத்துக்காக தொழிலாளர் தினத்திலும் பிரகடனங்களாக பகிரங்கமாக முன்வைக்கிறோம்.
இன்றைய மேதின நிகழ்வின் ஊடாக
சிதறுண்டுள்ள மக்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுத்துவதாக உணர்கிறேன்.
விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும்
விடுதலைக்காகவும் நின்ற மண்ணில் இன்று மே தினம் இடம்பெற்றுள்ளது.
அமைதியாகவும், ஜனநாயக வழியிலும் போராட்டங்களை முன்னெடுக்கவும் அடித்தளமாக இன்றைய மே தின நிகழ்வு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.